சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த லேசான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த லேசான காற்றழுத்தத் தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.அதே சமயம், அடுத்த 6 நாட்களுக்கு இயல்பான அளவை விட குளிர் அதிகமாக இருக்கும். கிழக்கு திசையில் வீசும் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதால் குளிர் அதிகமாக இருக்கும். வடகிழக்குப் பருவ மழை இன்னும் முடியவில்லை. கிழக்கு திசையில் இருந்து காற்று வீசி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.