கொழும்பு;
கடலில் மீன்பிடிக்கச் சென்ற சுமார் 3 ஆயிரத்து 500 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் அவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து 650 படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமையன்று கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது செவ்வாயன்று அவ்வழியாக இயந்திர படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை திரும்பிச் செல்லும்படி கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் கிழித்து நாசப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையிடமிருந்து தப்பி வேகவேகமாக கரைக்கு திரும்பியுள்ளனர்.கடந்த ஜனவரி 7-ஆம் தேதியும் இதேபோல் 800-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற சுமார் 4 ஆயிரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். அவர்கள் கொண்டு சென்ற மீன்பிடி வலைகளை பறித்துக் கொண்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளையும் பிடித்து வைத்துக் கொண்டனர்.இந்நிலையில், அடுத்த இரண்டாவது நாளில் மீண்டும் தமிழக மீனவர்களை விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: