சேலம், ஜன.9-
சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவரம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்ரோஹிணி ரா.பாஜிபாகரே கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தங்களுக்கான வாழ்க்கை துணையை அமைத்து கொள்வதில் உள்ள சிரமத்தை போக்கும் வகையில் மாற்றுத்திறனாளியை இணை மாற்றுத்திறனாளிகள் திருமண புரிந்து கொள்ளவும், மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் புரிந்து கொள்ளவதற்கும் சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக மாநில அளவில் சுயவரம் சேலம் நேரு கலையரங்கில் பிப்.11 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இந்த சுயவரத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்ய நல்ல நிலையில் உள்ளவர்கள் மாவட்ட மாற்றுத்த்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.11 தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரிக்கு கடிதம் மூலமாக தங்களது முழு அளவுபுகைப்படத்துடன் கூடிய சுய விவரங்களுடன் 03.02.18க்குள் விண்ணப்பித்திடலாம்.மேலும் பிற மாவட்டங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இது தவிர www.salemsuyamvaram.comஎன்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0427-2415242, 9080954783, 9443211694, 9095732664, 9445879070, 9842184404 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் இவர்களுக்கான திருமணத்தினை திருமாங்கல்யம், சீர்வரிசையுடன் இலவசமாக நடத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.