காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள சிறுபாகல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின் றன. இங்கு அரசு அனுமதியின்றி நடத்தப் படக் கூடிய கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.

இதனால், மேலும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வெடிச் சத்தம் கேட்பதாகவும், அதிர்வினால் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல முறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் பல போராட் டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப் பாட்டம் செய்தனர்.

இந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள மார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் விவசாய நிலங்களை வாங்கி, கடந்த 5 ஆண்டுகளாக கல்குவாரி மற்றும் மணல் குவாரி நடத்தி வருகிறது.இதனால் நாங்கள் எப்போதும் பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது என்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசிய பொன்னம்மா கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் டி.சிறீதர் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு துவக்கிவைத்தார். சிபிஎம் காஞ்சி பெருநகர குழு செயலாளர் சி.சங்கர், ஜனநாயக மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சவுந்தரி, உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் வசந்தா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுபான்மை மக்கள் குழு சார்பில் இ.லாரன்ஸ் உட்பட பலர் பேசினர். குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இ.முத்துக்குமார் சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.