பொள்ளாச்சி, ஜன. 9-
கிணத்துக்கடவு பகுதியில் குறுகிய சாலையினை இரு வழிச்சாலையாக விரிவுபடுத்தக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை எண்.209 ல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி முதல் கோவை ஈச்சனாரி வரை சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதன்படி கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேல் புறம் தெற்கு நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையானது மிக குறுகலாக உள்ளது. இந்த ஓரு வழிச் சாலையினையொட்டி அண்ணா நகர், செம்மொழிக்கதிர் நகர்,அக்சயாகல்லூரி என போக்குவரது நெரிசல் மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு தினசரி சந்தை முதல் பகவதிபாளையம் பிரிவு வரை இந்த ஒரு வழிச்சாலை மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி குறுகிய சாலையினை இரு வழிச்சாலையாக விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவினை கிணத்துக்கடவு தாலுகா செயலாளர் திருஞானவேல் தலைமையில், பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், செயலாளர் ரவி. முருகேஷ், கமிட்டி உறுப்பினர் ஜி.மணிகண்டன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.