சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கல்லூரியில் உள்ள கழிவறை சுத்தம் செய்ய மாணவர்களிடம் ஒரு நபர் வீதம் செமஸ்டருக்கு ரூ. 30வசூலிக்கப்படுகிறது.

ஆனால், கழிவறை சுத்தம் செய்வது கிடையாது. மேலும் கல்லூரியில் குடிக்கத் தண்ணீர் இல்லை. இந்நிலையில், கழிவறையில் நாப்கின் எரிபான் எந்திரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறிமாணவ -மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, இந்தியமாணவர்கள் சங்கம் தலைமையில் செவ்வாயன்று (ஜன.9) கல்லூரி வலாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். “கல்லூரிக்கு வருடத்திற்கு பராமரிப்பு செலவுக்காகரூ. 20 லட்சம் அரசு கொடுக்கிறது. மேலும் இங்குள்ளதுப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாகக் கழிவறை சுத்தம் செய்வதற்கு மாணவர்களிடம் பணம் வசூல் செய்வது மிகவும் கண்டனத்திற்கு உறியது.

” என மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சுனில்குமார் கூறினார். இப்பிரச்சனை குறித்து கல்லூரி முதல்வர் முருகேஸ்வரியிடம் கேட்டபோது “மாணவர்களின் குறைகளை மூன்று நாட்களில் சரிசெய்யப்படும். எங்களுக்கு பராமரிப்பு செலவுக்கு அரசிடம் இருந்து குறைவான பணம் தான் வருகிறது. குடி தண்ணீர் குறித்து பொதுபணித்துறையில் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: