சென்னை வேப்பேரியில் உள்ள செவன்த்டே பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலித்ததைக் கண்டித்து மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு போட்டனர்.நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கல்விக்கட்டண அடிப்படையில் அனைத்துத் தனியார் பள்ளிகளும் வசூலிக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியான செவன்த்டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி அதைவிடக் கூடுதலாக கட்டணத்தை வசூலித்து பெற்றோர் களை ஏமாற்றி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் மாணவர், பெற்றோர் நலச்சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையொட்டி 2011-2012 கல்வி ஆண்டில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணமான ரூ1 கோடியே 8 லட்சத்து68 ஆயிரத்து 995ஐ பெற்றோர்களிடம் திரும்ப வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் ரூ 93 லட்சத்து 20 ஆயிரத்தைத் திரும்ப வழங்கியதாகப் பெற்றோர்களை மிரட்டி ரெவின்யூ முத்திரைத்தாளில் கையெழுத்து பெற்றுக் கொண்டது. நிர்வாகத்தின் இந்த மோசடியைத் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழுவின் தலைவரிடம் நலச் சங்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இதனால் அவர் அந்தப் பள்ளிக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு அந்த அபராத தொகையை வழங்க வேண்டும் என்று நலச்சங்கம் பெற்றோர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை மட்டும் கட்டுவோம் என்று பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் கட்டணத்தை வாங்க மறுத்தது. இதனால் பெற்றோர் வங்கி வரையோலையை தபால் மூலம் அளித்தபோது நிர்வாகம் திருப்பி அனுப்பியது. மேலும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் மிரட்டியது. நிர்வாகத்தின் மிரட்டலுக்குப் பணியாத குழந்தைகள் தரக்குறைவாக நடத்தப் பட்டதுடன் நோட்டு புத்தகம்,மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் கொடுக் காமல் அலைக்கழித்தது. தொழில் முறை ரவுடிகளால் பெற்றோர்கள் மிரட்டப்பட்டனர். இந்தக் கல்வி வியாபாரிகளின் அராஜகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பொய்வழக்கு போட்டது.

குறிப்பாக நலச்சங்கத்தின் தலைவர் க.புகழேந்தி, செயலாளர் பி.நாகராஜன், பொருளாளர் பி.செல்வராஜ் ஆகியோர் பெண் ஆசிரியரை மானபங்கம் செய்ததாகவும், தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும், காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி 2012ல் 448, 323, 354 ஆர்டபுள்யூ 34 ஆகிய பிரிவின் கீழ் வழக்கை ◌ேஜாடித்தது.இந்த அடாவடி பொய் வழக்கை எதிர்த்து வழக்கறிஞர்கள் அன்பரசு, எல்.தியாகையா, கே.முருகன் ஆகியோர் ஆதாரத்துடன் வாதாடினர்.

இதன் பயனாக ஜன. 4 அன்று நிர்வாகிகள் மூவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். பணத்திற்கு விலைபோகும் சிலபொய் சாட்சிகளை வைத்துக்கொண்டு மக்களுக்காகப் போராடும் சமூகஆர்வலகர்கள், இடதுசாரிகள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க தனியார் பள்ளி மாபியாக்கள் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலஅமைப்பின் மாநில தலைவர் அருமைநாதன் கூறுகையில், “கூடுதல் கல்விக்கட்டண கொள் ளைக்கு எதிராக எங்களது நலஅமைப்பு பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகிறது. வேப்பேரி செவன்த்டே பள்ளி நிர்வாகத்தைப் போல் சென்னையில் பல பள்ளிகள் இருக்கின் றன. எங்கள் அமைப்பினர் மீது 15க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பொய் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்துள்ளன. அவற்றையெல்லாம் நேர்மையுடன் எதிர்கொண்டு அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள் ளோம். இந்தத் தீர்ப்பு பொய்வழக்கு போடும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் .

இனி தன் இஷ்டத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தினர் கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தை இந்தத் தீர்ப்பு கொடுக்கும். மாணவர், பெற்றோர் நலனுக்காகப் போராடும் புகழேந்தி, நாகராஜன், செல்வராஜ் ஆகியோரின் பணிபாராட்டத்தக்கது, நீதியை நிலை நாட்ட உழைத்த வழக்கறிஞர்கள் அன்பரசு, தியாகய்யா, முருகன் ஆகியோருக்கு எங்கள் அமைப்பின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.லாபம் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் தனியார் பள்ளிகளை எங்கள் அமைப்பு கடுமையாக எதிர்க்கும், கூடுதல் கட்டணத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து சட்டரீதியாகவும் செயல்பாட்டுரீதியாகவும் போராடுவோம். எங்கள் போராட்டம் ஓயாது என்று புகழேந்தி, நாகராஜன், செல்வராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.