நாமக்கல். ஜன. 9-
ஊதிய மாற்றம் ஏமாற்றமே என்ற தலைப்பில் நாமக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் ஆ.சரவணன் தலைமை வகித்தார். இதில் “ஊதிய மாற்றம் ஏமாற்றமே” என்ற தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் “ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வை கேள்வி குறியாக்கும் தன்பங்கேற்பு ஒய்வூதிய திட்டம்” என்ற தலைப்பில் மாநில பொருளார் ச.ஜீவானந்தம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இக்கருத்தரங்களில் மாநில துணை பொதுச்செயலாளர் ச.மயில், மாநில செயலாளர் இ.வின்சென்ட், மாநில துணை  தலைவர் தோ.ஜான்கிறிஸ்துராஜ், மாவட்ட செயலாளர் இர.மாதேஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ம.கலைசெல்வன், மாவட்ட பொருளாளார் எஸ்.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: