தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தீவிர விவசாய முறைகளும், அதிக மகசூல் தரும் பயிர் இரகங்களை பயிரிடுவதும், அங்கக உரங்களை பயன்படுத்தாமையுமே இன்றைய நிலையில் பெருகிவரும் விளை நிலங்களின் ஊட்டச்சத்து பற்றhக்குறைக்கு அடிப்படைக் காரணங்களாகும். இந்திய மண் வகைகளில் துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் தாமிர ஊட்டச் சத்துக் குறைபாடானது 49, 12, 5 மற்றும் 3 சதமாக காணப்படுகின்றது. தமிழகத்தில் நுண்நூட்டச் சத்துக் குறைபாடானது பரவலாக எல்லா மாவட்டங்களிலும் காணப்படுவதோடு, துத்தநாகக் குறைபாடு மிக அதிகமாகவும் (57 சதம்) அதையடுத்து இரும்பு (17 சதம்), மாங்கனீசு (6 சதம்) மற்றும் தாமிரம் (6 சதம்) குறைபாடும் காணப்படுகின்றது.

நுண்ணூட்டப் பயிர் சத்துக்கள்
துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, போரான், மாலிப்டினம் போன்றவை பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலில் முக்கியப் பங்கு வகிப்பதால் இவை நுண்ணூட்டங்கள் என்று கருதப்படுகின்றன. மண்ணில் இரும்பு, மாங்கனீசைத் தவிர மற்ற நுண்ணுனூட்டங்களின் அளவு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. பயிர் வளர்ச்சிக்குத் தேவைப்படும் நுண்ணுனூட்டங்களின் முக்கியப் பங்கு, குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள் பற்றி கீழ் காண்போம்.1. போரான்
போரான் பற்றாக்குறை தமிழ்நாட்டு மண் வகைகளில்  55 சதம் என்டிசால் வகையிலும், அடுத்து இன்செப்டிசால் (50 சதம்), அல்பிசால் (46 சதம்) மற்றும் களிமண் (25 சதம்) வகையிலும் காணப்படுகின்றன. மணல் சார்ந்த களி அதிகமில்லாத மண் வகைகளில் 6லிருந்து 64 சதம் வரையிலும் களிமண் வகை நிலங்களில் மிகக் குறைந்த அளவே (10-36 சதம்) காணப]பட்டது. பொதுவாக போரான் குறைவு உவர் நிலங்களிலும் பரவலாகத் தோன்றும்.

குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்
நுனி இலைகள் சிறுத்து மஞ்சள் கலந்த பச்சை நிறம் அடைகின்றன. செடிகளின் கீழ்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் தடித்து காணப்படும். இலைக்காம்புகள் வளைந்து நடுப்பாகத்தில் அழுகல் தோன்றும். நடுத்தண்டின் குருத்து கருகி, கருகிய குருத்துக்கும் கீழ் புதுக்குருத்துகள் தோன்றும். இலைகள் தடிப்பாகக் காணப்படும். விதைகள் கொத்தாகி விடும். பூக்களின் கீழ் பாகத்தில் கருமை படரும். போரான் அளவு மிகவும் குறையும் போது திசுச்சுவர்கள் உடைந்து தேன் போன்ற திரவம் வெளிப்படுகிறது. இதனால் பூக்கள் உதிர்ந்து மகசூல் குறைகின்றது.

உரப்பரிந்துரை
போரான் குறைபாடு மணற்பாங்கான மண்ணிலும் சுண்ணாம்புச்சத்து மிக அதிகமாக உள்ள மண்ணிலும் காணப்படும். உவர் மண்ணில் போரான் அதிக அளவில் இருக்கும். கிணற்று தண்ணீரிலும் போரான் இருப்பதால் இது மண்ணில்போரான் கிடக்கையை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறது. போராக்ஸ் உரத்தை எக்டருக்கு 12.5 கிலோ அடியுரமாக சமபங்கு மணலுடன் கலந்து தூவிவிட வேண்டும். பயிர்களின் மீது தெளிக்க 0.2 சத போராக்ஸ் அல்லது போரிக் அமில உரத்தினை கரைக்க வேண்டும். செடிகள் நன்கு நனையுமாறு 3 முறை ஒரு வார இடைவெளியில் தௌயீக்க வேண்டும்.

2. துத்தநாகம்
எல்லா தாவரங்களுக்கும் மணிச்சத்தின் தேவையில் நுனூற்றில் ஒரு பங்கு துத்தநாகச்சத்தும் தேவைப்படுகிறது. களர் நிலங்களிலும், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும், இயற்கை எரு கூடுதலாக இடப்பட்டு வரும் நிலங்களிலும், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண்ணிலும் இச்சத்து பயிர்களுக்குக் கிடைப்பதில்லை.குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்
துத்தநாகம் குறைபாட்டினால் இளந்தளிர் இலைகளில் நடு நரம்பு அடிப்புறத்தில் வெளுத்துக் காணப்படும்.இலைகளின் அளவு சிறுத்து பயிh] வளா]ச]சி குன்றி காணப்படும். இலைகளில் மஞ்சள் நிறக்கோடுகள் விhயீந்து பரவும். பின்பு இலை முழுவதும் வெண்மையாகி விடும். இலைகள் மஞ்சளாகவும் மிருதுத்தன்மை இழந்து, தடித்தும் இலைகளின் ஓரங்கள் மேற்பக்கமாக சுருண்டும் காணப்படும்.

உரப்பரிந்துரை
பயிர்களுக்குப் பேரூட்ட உரங்களை இட்ட பிறகு எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டினை சம அளவு மண்ணுடன் கலந்து ஒரே சீராக நிலத்தின் மேல் தூவி விட வேண்டும். யூரியாவுடன் துத்தநாக சல்பேட்டினைக் கலக்கக் கூடாது. ஏனெனில் நீர்த்து கட்டியாகி விட வாய்ப்பு உண்டு. துத்தநாகக் குறைபாட்டிற்கு துத்தநாக சல்பேட் இடுவதால் பல்வேறு பயிர்களின் விளைச்சல் 10 சதத்திலிருந்து 25 சதம் வரை அதிகரிக்கும். விளைச்சல் அதிகரிப்பு மண்ணின் தன்மைகளுக்கேற்ப வேறுபடுகின்றது. பயிரில் துத்தநாகக் குறைபாடு தெரிந்தவுடன் 0.5 சதம் துத்தநாக சல்பேட் ரூ 1.0 சதம் யூரியா கரைசலை ஒரு வார இடைவெளியில் 3 முறை தௌயீக்க வேண்டும். இளம்பருவத்தில் தெளித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். செடிகள் நன்றhக நனையுமாறு, காலையில் அதாவது வெயிலுக்கு முன்பு தெளிக்க வேண்டும்.

3. தாமிரம்
தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு தாமிரம் பயன்படுகிறது. வளரும் பகுதியில் நுனி காய்வதைத் தடுக்கிறது. பயிர்கள் சுவாசிக்கவும், இரும்புச் சத்தை எடுத்துக்கொள்ளவும் தாமிரம் தேவைப்படுகிறது. அமில நிலங்களில் தாமிரம் பற்றாக்குறை தெரிய வருகிறது. தழைச்சத்தையும், மணிச்சத்தையும் அதிக அளவில் பயன்படுத்தும்போது பற்றாக்குறை காணப்படலாம். மணற்சாரி நிலங்களிலும், சரளை மண் பகுதிகளிலும் பயிர்களுக்கு கிடைப்பதில்லை. களர், உவர் நிலங்களிலும், சுண்ணாம்பு மிகுந்த நிலங்களிலும், புதிதாக சீர்திருத்தம் செய்யப்பட்ட நிலங்களிலும் இது பயிர்களுக்குக் கிட்டுவதில்லை. குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்
நுனி மற்றும் இளம் தளிர் இலைகள் வெளுத்து குறுகி சுருண்டு காணப்படும். பயிர் வளர்ச்சி குன்றி மேலிருந்து கீழ்நோக்கி கருக ஆரம்பிக்கும். பயிர்களின் வளரும் பாகங்களில் ஒருவித வறட்சி கலந்த தொய்வு காணப்படும்.

உரப்பரிந்துரை
நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, பயறுவகைப் பயிர்கள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு மயில்துத்தத்தை (தாமிர சல்பேட்) எக்டருக்கு 12.5 கிலோ அடியுரமாக இட வேண்டும். விதைப்பதற்கு முன்பு மயில்துத்தத்தை மணலுடன் கலந்து சீராக நிலத்தின் மீது தூவி விட்டு கலக்கி விட வேண்டும். தாமிர சல்பேட்0.2 சத கரைசல் பயிர்களுக்குத் தெளிக்கலாம். கரைசலின் அடர்த்தி அதிகமானால் இலைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. தாமிரச்சத்து குறைபாட்டினை நன்கு அறிந்த பின்பு உரமிடுவது நல்லது. பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகள் வழியாகவும் ஓரளவிற்கு தாமிரம் அளிக்கப்படுகின்றது.

4. மாலிப்டினம்
நுண்ணுனூட்டங்கள் அனைத்திலும் மாலிப்டினம் மிகமிகக் குறைவான அளவே தேவைப்படுகின்றது. மாங்கனீசு சத்து மிகுந்து காணப்படும் மணற்சாரி நிலங்களிலும், இலை மக்கு மிகுந்த நிலங்களிலும், அமில நிலங்களிலும் இச்சத்து பயிர்களுக்குக் கிடைப்பதில்லை. மாலிப்டினம் பற்றாக்குறை உள்ள நிலங்களில் தழைச்சத்து பற்றhக்குறையும் சேர்ந்தே காணப்படும். முதிர்ந்த இலைகளில் இதன் பற்றாக்குறை முதலில் தோன்றும். அமில நிலங்களில் சுண்ணாம்புச் சத்தை போதிய அளவு இடுவதன் மூலம் மாலிப]டினம் பயிர்களுக்குக் கிடைக்குமாறு செய்ய முடியும். மண்ணில் இதன் அளவு 0.05 மி.கி.,கிலோவை விட குறையும்போது இவ்வூட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகின்றது. குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்
பயிர்கள் வெளுப்புத் தட்டி வளர்ச்சி குன்றிக் காணப்படும். இலைகள் சிறுத்து வால் போன்று தோற்றமளிக்கும். சிறுத்த இடைக்கணுக்கள் மாலிப்டினக் குறைபாடுள்ள பயிர்கள் வெப்பம் மற்றும் தண்ணீர் தேங்குதல் போன்ற காரணிகளால் பொயீதும் பாதிக்கப்படுகின்றன.

உரப்பரிந்துரை
மாலிப்டினக் குறைபாட்டினைப் போக்க ஒரு எக்டருக்கு 0.5 முதல் 1.0 கிலோ சோடியம் மாலிப்டேட்டு உரத்தினை அடியுரமாக மணலுடன் கலந்து சீராகத் தூவி கலந்து விட வேண்டும். செடிகளுக்குத் தெளிக்க 0.05 சத கரைசலை பயன்படுத்த வேண்டும். இதற்கு 50 கிராம் சோடியம் மாலிப்டேட்டினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். குறைபாடு தெரிய ஆரம்பித்தவுடன் 7 முதல் 10 நாள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும்.

5. இரும்புச் சத்து
பொதுவாக இரும்புச் சத்துக் குறைபாடு எல்லாவகை மண்ணிலும் காணப்படாது. மண்ணில் கால்சியத்தின் அளவைப் பொறுத்து இதன் குறைபாட்டை கண்டறிய 2 வகையான குறியீட்டு அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பின் 6.3 மி. கி. , கிலோ ஆகவும், குறைவாக இருப்பின் 3.7 மி.கி.,கிலோ ஆகவும் குறியீட்டு அளவுகள் உள்ளன. அமில நிலங்களிலும், கார நிலங்களிலும், மணல் சார்ந்த நிலங்களிலும் கூட பற்றாக்குறை அறிகுறிகளைக் காணலாம். மண்ணில் வடிகால் அமைப்புகள் இல்லாத நிலையிலும், போதிய காற்றோட்டம் இல்லாவிட்டாலும் கூட இரும்புச்சத்து பயிர்களுக்குத் தேவையான அளவு கிடைக்காது. குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்
இலை நரம்புகளுக்கிடையே உள்ள பகுதி வெளுத்துக் காணப்படும். புதிதாக வளரும் துளிர் இலைகள் வெளுத்துக் காணப்படும். செல் பிரிதல் மற்றும் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. புரத தயாhயீப்பு மற்றும் வினைகளில் பங்காற்றுகிறது. வினையூக்கிகளான கேட்டலேஸ், பெராக்சிடேஸ், சைட்டோகுரோம் ஆக்சிடேஸ் போன்றவற்றில் முக்கியமான ஒன்றாகும். வளரும் தண்டு மற்றும் வேர்ப்பகுதி வளர்ச்சி குன்றிக் காணப்படும். மூ பச்சையம் உருவாகுதல், செல் பிரிதல் மற்றும் வளர்ச்சி ஆகியன தடைபடும். இக்குறைபாட்டால், ரோஜா, பழப் பயிர்கள், சோளம், மக்காச்சோளம், பட்டாணி, தக்காளி மற்றும் தானியப் பயிர்களே மிக அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.

உரப்பரிந்துரை
பயிர்களுக்கு இரும்பு சல்பேட்டை அடியுரமாக தொழு உரத்துடன் சேர்த்து இடுவது மிகவும் முக்கியம். இரும்பு சல்பேட் 1.0 சதவீத கரைசலுடன் 0.1 சதவீதம் சிட்ரிக் அமிலம் உப்பு சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். பயிர்களில் குறைபாடு தோன்றியவுடன் இரும்பு சல்பேட் கரைசலை ஒரு வார இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை குறைபாடு நீங்கும் வரை தௌயீக்க வேண்டும். இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு கரைசல் தெளிப்பது மண்ணிற்கு அடியுரமாக இடுவதைக் காட்டிலும் நல்ல பலனைத் தரும்.

6. மாங்கனீசு
பொதுவாக மாங்கனீசு சத்துக்குறைவு உவர் நிலங்களில் காணப்படும். மாங்கனீசு பற்றhக்குறை சுண்ணாம்புச்சத்து உள்ள மண் வகைகள் மற்றும் காரத்தன்மை 8.0க்கு மேல் உள்ள மண் வகைகளிலும் காணப்படும். மணற்சாரியான நிலங்களிலும், இரும்பு சல்பேட் அதிகளவு பயன்படுத்தி வந்தாலும் மாங்கனீசு குறைபாடு காணப்படும்.குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்
துளிர் இலைகளில் நடுநரம்பு மற்றும் முக்கிய நரம்புகளை ஒட்டி கரும்பச்சை பகுதியும், அதை அடுத்து வெளிர் பச்சை நிறப் பகுதியும் காணப்படும். பயிர் வெளுத்து, மெலிந்து ஆங்காங்கு பழுப்பு நிறப்பகுதிகள் காணப்படும்.

உரப்பரிந்துரை
மாங்கனீசு குறைபாட்டை நீக்க மாங்கனீசு சல்பேட் உரத்தினை அடியுரமாகவோ அல்லது பயிர்களின் மீது தெளித்தோ நிவர்த்தி செய்யலாம். ஒரு எக்டருக்கு 25 கிலோ மாங்கனீசு சல்பேட்டினை சமபங்கு மணலுடன் கலந்து ஒரே சீராகத் தூவி விட்டு மண்ணுடன் கலந்துவிட வேண்டும். பயிர்களின் மேல் தெளிக்க 1.0 சதவீத மாங்கனீசு சல்பேட் கரைசலைத் தயாரிக்க 1 கிலோ மாங்கனீசு சல்பேட்டினை 100 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.

செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். பொதுவாக நுண்ணுனூட்டக் குறைபாடுகளை பேரூட்ட உரங்களை இடுவதாலும் அங்கக உரங்களைப் பயன்படுத்துவதாலும் கூட நிவர்த்தி செய்யலாம். பொதுவாகப் பயன்படுத்தப்படும். எந்த ஒரு பயிர் சாகுபடி செய்வதற்கும் முன்பு, மண்ணின் சத்துக் கிடக்கையைக் கண்டறிந்து தேவையான ஊட்டங்களை சமச்சீராக இடுதல் அவசியமாகின்றது.

Leave A Reply

%d bloggers like this: