மதுரை;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 22வது மாநாடு ஜனவரி 7, 8 தேதிகளில் செல்லூர் சோலை மகாலில் தோழர் ஐ.மாயாண்டிபாரதி, பி.நாகம்மாள் நினை வரங்கில் நடைபெற்றது.

மாநாட்டில் இன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி. நிறைவுரை நிகழ்த்தினார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது ஆகியோர் பங்கேற்றனர்.மாநாட்டின் நிறைவில் கட்சியின் மாவட்டச் செய லாளராக இரா.விஜயராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக இரா.ஜோதிராம், இரா.அண்ணாதுரை, வி.பிச்சை, பி.ராதா, மா.கணேசன், இரா.தெய்வ ராஜ், ஜா.நரசிம்மன், ஏ.ரமேஷ், ஏ.கோவிந்தராஜ், எம்.பாலசுப்பிரமணியம், கே.வசந்தன், ஆர்.சசிகலா ஆகி யோரும் மாவட்டக்குழு உறுப்பினர்களாக என்.நன்மாறன்,மா.செல்லம், ஏ.நேரு, ஆர்.வாசுதேவன், ஏ.பிச்சைமணி, இரா.லெனின், பி.ஜீவா, எஸ்.எம்.சாமி, வை.ஸ்டாலின், எஸ்.பாலா, ஜெ.லெனின், என்.ஜெயச்சந்திரன், எஸ்.சந்தியாகு, கு.கணேசன், எ.கனகசுந்தர், கே.ராஜேஸ்வரி, டி.குமரவேல், எ.பாலு, சி.சுப்பையா, ஏ.எஸ்.செந்தில் குமார், யு.எஸ்.அபுதாகிர், என்.சுரேஷ்குமார், அழகர்சாமி, எஸ்.பாலகிருஷ்ணன், லூர்து ரூபி, பி.கோபிநாத், செல்வா, க.ஜென்னி என மொத்தம் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

நாளை பேரணி
மாநாட்டின் நிறை வாக ஜனவரி 9 செவ்வாயன்று மதுரை தெற்குவாசல்
அருகில் உள்ள கீரைத் துறையில் பாம்பன் ரோட்டிலிருந்து மாபெரும் செந்தொண்டர் பேரணி நடைபெறுகிறது. ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.