கோவை, ஜன.8-
கோவை கோட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 11 ஆயிரத்து 819 தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை உடனே வழங்க வண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஜன.4ம் தேதி மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை கோட்டத்தின் கீழ் கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இதில் ஓட்டுனர், நடத்துனர் தொழில்நுட்ப பணியாளர், அலுவலக பணியாளர் உட்பட 18 ஆயிரத்து 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 5 ஆயிரத்து 196 ஓட்டுநர்கள், 4 ஆயிரத்து 712 நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் 1, 823 மற்றும் அலுவலக பணியாளர்கள் 88 பேர் என மொத்தம் 11 ஆயிரத்து 819 பேருக்கு விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முன்னறிவிப்பு இன்றி தொடர்ந்து விடுமுறையில் உள்ளீர்கள். உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: