திருப்பூர், ஜன.6 –
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

உச்சவரம்பின்றி ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்சம் ஊதியம் ரூ.18 ஆயிரம் மற்றும் மறுக்கப்பட்டுள்ள மத்திய அரசுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும். மாநகராட்சி , நகராட்சி மற்றும் போரூராட்சி அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் முலமாக ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து சனியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ், அங்கன்வாடி சங்க மாநில பொருளாளர் பி.பாக்கியம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பி.கனகராஜா, அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ஞானதம்பி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஓ.சுந்தரமூர்த்தி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இப்போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: