போக்குவரத்து தொழிற் சங்க தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த விதமாக முடிவுகளும் எட்டப்படாத தால் வெள்ளிக்கிழமையிலிருந்து போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிஐடியு, தொ.மு.ச.உள்பட 13 தொழிற் சங்கத்தினர் இந்தபோராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாமல் பணிமனை யில் கிடக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம், ஆற்காடு, சோளிங்கர், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்பட 9 இடங்களில் அரசுபோக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து தினமும் 723 பேருந்து கள்இயக்கப்பட்டு வருகிறது. அதில் 254 டவுன் பேருந்துகள் ஆகும்.

இந்த பணிமனைகள் மூலம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக முற்றுளுமாக பேருந்துகள் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும்ஆங்காங்கே உள்ள பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி கொணவட்டம் பணிமனையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பேருந்துகள் ஓடாது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொண்டதால் பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு செல்வதை தவிர்த்து விட்டனர்.

இதனால் வேலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. தனியார் பேருந்துகள் மட்டும் இயங்கின.வேலூரிலிருந்து – சென்னைக்குதனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதற்கு ஒரு நாளைக்கு ரூ.1,050 கட்டணமாக செலுத்தி தற்காலிக உரிமம் பெற்று ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கினர். இதன் காரணமாக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் அதிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதேபோன்று பெங்களூரு செல்லும் பேருந்துகளும் இயக்கவில்லை. இதனால் ஓசூர் வரை கூடுதலாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் இருந்து டவுன் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ– மணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களில் செல்லும் நிலை ஏற்பட்டது. தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். குடியாத்தம்அரசு போக்குவரத்து பணிமணையை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் வீரமணியை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்துதொழிலாளர்களை அனுப்பிவைத்தனர்.

Leave A Reply