அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டிமத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளலெட்சுமிபாய் தேசிய உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 27 முதல்ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை நடைபெற்றது.இப்போட்டிகளில் நான்கு மண்டலங்களில் இருந்தும் 16 அணிகள் பங்குபெற்றன. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி திருவள்ளுவர் பல்கலைக்கழக அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை பெற்று கோப்பையை வென்றனர்.

மூன்றாம் இடத்தினை சென்னை பல்கலைக்கழக அணிணினரும் நான்காம் இடத்தினை கோவா பல்கலைக்கழக அணியினரும் பெற்றனர்.2013 ஆம் ஆண்டு தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் வந்த பின் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முதல் துணைவேந்தர் மணியன் நிர்வாகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வராலற்றிலேயே பெண்கள் பிரிவில் முதல் முறையாக கால்பந்து விளையாட்டு அணியினர் முதல் இடம்பெற்று தங்கப் பதக்கம்வென்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்று சிதம்பரம் வந்தடைந்த பெண்கள் கால்பந்து அணியினருக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றிப்பெற்ற வீராங்கனைகளையும் பயிற்சியாளர்களையும் பேராசிரியர்களை இராஜசேகரன் , சிவக்குமாரை பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன், பதிவாளர் ஆறுமுகம், கல்விப்புல முதல்வர்பாபு, உடற்கல்வித்துறை கோபிநாத் ஆகியோர் பாராட்டினர். உடற்கல்வி துறையைச்சார்ந்த பேராசிரியர்கள் இணைபேராசிரியர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளும் அலுவலர்களும் திரளாக கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Leave A Reply

%d bloggers like this: