ஈரோடு, ஜன.6-
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அந்தியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாவித்திரி பாய் பூலே பிறந்த நாளைணமுன்னிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுக்காடு பிரிவில் வெள்ளியன்று நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் தாலுகா தலைவர் ஏ.முருகன் தலைமை வகிக்தார். மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பி.பி.பழனிச்சாமி, ஆதித்தமிழர் பேரவை செயலாளர் டி.ராஜா, மாதர் சங்க தலைவர் எஸ்.ராதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணியின் தாலுகா செயலாளர் எ.கே.பழனிச்சாமி, வாலிபர் சங்க மாவட்ட அமைப்பாளர் எ.சகாதேவன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், மலைவாழ் மக்கள் சங்க மாநில குழு நிர்வாகி எஸ்.வி.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: