ஈரோடு, ஜன. 6-
நிலுவைத் தொகையை உடனே வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் சனியன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் மற்றும் மறுக்கப்பட்டுள்ள மத்திய அரசுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் சனியன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர்பாபு, சண்முகம், ரஞ்சித்குமார், ராஜ முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆனந்த கணேஷன், வெங்கிடு, உஷா ராணி, கோபால கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகைஏடிசி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆனந்தன், ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆஸரா, ராமசந்திரன் ஆகியோர் கோரிக்
கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 250க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கூடலூர் தாலுகாஅலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சலீம், அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டததிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பின் நிர்வாகி செல்வம் உள்ளிட்ட திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் செந்தில்குமார், கருப்புசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கையை முன்வைத்து கூட்டமைப்பின் நிர்வாகி ரங்கராஜ்உரையாற்றினார். கல்லூரி மற்றும் பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வீரமணி, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி சரவணக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் செந்தூரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.