தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து தொழிற் சங்கங்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திவருகிறது. இந்த போராட்டத்தை முறியடிக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் வெளியாட்களைக் கொண்டுபேருந்துகளை இயக்க முயற்சிக்கிறது.தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள், சுற்றுலா வேன்களைக் கொண்டு சென்னை உள்ளிட்ட தொலை தூரங்களுக்கு இயக்கி வருகின்றன.

இந்தபேருந்துகளில் அதிகமாகக்கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு பேருந்தில் கட்டணம் ரூ 130, 140 மட்டுமே. ஆனால்தற்போது தனியார் பேருந்துகளில் ரூ. 250 முதல்300 வரை அதிகமாகக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிலும் சொகுசு பேருந்தாக இருந்தால் ரூ. 350 முதல் 400 வரையும் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பயணி கவிதா கூறுகையில், “ உறவினரின் துக்க நிகழ்ச்சிக்குக் குடும்பத்துடன் சென்னைக்குச் செல்கிறோம். தனியார் பேருந்தில் ஏறும்போது, நடத்துனர் ரூ.300 கட்டணம் என்றார். மேலும் குழந்தைகளுக்கு அரைகட்டணம் கிடையாது என்று கண்டிப்புடன் அவர் கூறினார். இரு குழந்தைகள் உட்பட 5 பேர் செல்கிறோம். பேருந்து கட்டணம் மட்டுமே ரூ.1500 செலவாகியுள்ளது” என சோகமாக கூறினார்.

போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் சி.எல்தொழிலாளர்களை ஆளும்கட்சியின் தொழிற் சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் “பணிக்கு செல்லவில்லையென்றால் பணி நிரந்தரம் சிக்கலாகிவிடும்” எனக் கூறிஅவர்களை அனுப்புகிறார்கள். இதில் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்களை நியமித்து பணிக்குஅனுப்புகிறார்கள். பயணிகள் பயத்துடனே பயணம்செய்கிறார்கள். பொதுமக்களின் உயிர்களை பற்றிஅரசு கவலைப்படவில்லை எனப் பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: