மதுரை , ஜன. 7-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 22-ஆவது மாநாடு ஞாயிறு அன்று காலை செல்லூர் சோலை மகாலில் தோழர் ஐ.மாயாண்டி பாரதி, பி.நாகம்மாள் நினைவரங்கில் ஆர்.ப்ரீதி,கே.அலாவுதீன்,கே.ஜென்னி ஆகியோர் தலைமையில் துவங்கியது.

முன்னதாக பீ.பீ.குளத்தில் கட்சியின் மூத்த தோழர் மைக் அழகர் எடுத்துகொடுத்த தியாகி மாரி-மணவாளன் நினைவுக் கொடியினை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பெற்று கொண்டார். வில்லாபுரம் தியாகி லீலாவதி நினைவு ஜோதியினை மாவட்டக்குழு உறுப்பினர் பா.மாரிச்சாமி எடுத்து கொடுக்க மத்தி யக்குழு உறுப்பினர் பி. சம்பத் பெற்று கொண்டார். மாநாட்டுக் கொடியினை மூத்த தோழர் எஸ்.மன்னார்சாமி ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கணேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன் வரவேற்றுப் பேசினார். பி.சம்பத் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் வேலை அறிக்கை-ஸ்தாபன அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராதா வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி எஸ்.நூர் முகமது பேசினார். தொட ர்ந்து பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது.மாநாடு தொடர்ந்து திங்கள், செவ்வாயில் நடை பெறுகிறது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன், மதுக்கூர் ராம லிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.ஜோதி ராம், இரா.அண்ணாதுரை பங்கேற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: