புதுதில்லி;
ரப்பரின் இறக்குமதி அளவைக் குறைக்க வேண்டும் என்று ரப்பர் உற்பத்தித் துறையினர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.தில்லியில் ரப்பர் விவசாயிகள் கொண்ட குழு, காம்கோ நிறுவனத் தலைவர் சதிஷ் சந்திராவுடன் சென்று, தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவைச் சந்தித்தது. அப்போது, ரப்பர் இறக்குமதியினால் சிறு மற்றும் நடுத்தர ரப்பர் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துரைத்த அந்த குழு, தேசிய ரப்பர் கொள்கையின் அவசியத்தையும் வலியுறுத்தியது. வெளிநாட்டில் ரப்பர் குறைவான விலையில் கிடைப்பதால், உள்ளூரில் ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட ரப்பரின் விலைக் குறைவு விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. 2012-13ல் கிலோ ஒன்றுக்கு ரூ.175 முதல் ரூ.240 வரை இருந்த ரப்பரின் விலை தற்போது கிலோவிற்கு ரூ.125 ஆகக் குறைந்துள்ளது. எனவே, ரப்பருக்கான இறக்குமதி வரியை உயர்த்துவதோடு, ரப்பர் இறக்குமதிக்குக் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த குழு அரசுக்கு கோரிக்கை வைத்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.