தூத்துக்குடி;
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 58 ஆயிரத்து 616 டன் மணல், இன்று மங்களூரு கொண்டு செல்லப்பட்டது.சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், மலேசியாவின் பினாங் பகுதியிலிருந்து 58 ஆயிரத்து 616 டன் மணலை இறக்குமதி செய்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைத்திருந்தது. இந்நிலையில் இறக்குமதி மணலை பொதுப்பணித்துறை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், மணலின் விலையை அரசே நிர்ணயிக்கும் எனவும் தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அந்நிறுவனம் இறக்குமதி மணலை கப்பல் மூலம் மங்களூருக்கு கொண்டு சென்றது.

Leave A Reply

%d bloggers like this: