ராஞ்சி:
பாஜகவை பின்பற்றுவதை விட உயிரை விடுவேன் என லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளாக நடந்துவந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு காரணங்களுக்காக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

தண்டனை அறிவிப்புக்குப் பிறகு லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எங்களை பின்பற்றுங்கள் இல்லை உங்களை முடித்து விடுவோம் என்ற பாஜகவின் விதியை பின்பற்றுவதை விட சமூக நீதி, அமைதி மற்றும் சமநிலையை நிலைநாட்டுவதற்காக உயிரை விடுவேன் என தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

%d bloggers like this: