அப்படி ஒன்றும்
அவன் அறிமுகமில்லைதான்
ஆனால் அதுவே எமக்கு
தேவையிருக்கவில்லை…

அவனுக்கும் தான்…
அனிதாவைத் தெரியாது
ஆனால் எழும்பூரில் நின்று
நீட்டுக்கு எதிராக எழுந்து
நீதி கேட்டானல்லவா?

அவனுக்கும் தான்
கவின் கல்லூரி மாணவன்
பிரகாஷைத் தெரியாது
கல்லூரிக்குள் புகுந்து
கலகம் செய்தானல்லவா?

அநீதி கண்டு கொந்தளித்தால்
அவன் தோழன் என்றுதான்
அவனுக்கும் சொன்னான்
எனக்கும் சொன்னான் ‘சே’

வெடிப்புறும் விதைகள்
மொட்டவிழும் முன்னர்
முளையில் கருகினால்
என் செய்வேன் என் செய்வோம்?
எங்கள் மாணிக்கமே….!

-சூர்யா,கோவை.

Leave A Reply

%d bloggers like this: