பெலகாவி;
லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, “செய் அல்லது செத்துமடி” என்ற முழக்கத்துடன், மார்ச் 23-ஆம் தேதி முதல் தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக பேட்டி அளித்த ஹசாரே, தற்போதைய பிரதமர் நரேந்திரே மோடி லோக்பால் மசோதாவை கண்டுகொள்ளவில்லை என்றும், ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று அவர் பொய் கூறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், “என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு கெஜ்ரிவாலையும், கிரண்பேடியையும் எனது இயக்கத்தில் சேர்த்ததுதான்” என்றும் “இருவருமே சுயநலவாதிகள்” என்றும் புலம்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: