புதுதில்லி;                                                                                                                                                                                உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில், தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அகில இந்திய அளவில், 2016 -2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவ – மாணவியரின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 18 -23 வயது கொண்டவர்கள் உயர் கல்வியில் சேரும் அளவை கணக்கிட்டு இந்த பட்டியலில் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:

“நாடுமுழுவதும் உயர் கல்வியில் சேருபவர்கள் பட்டியலில் தமிழகம், 46.9 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. ஆண்- பெண் விகிதாச்சாரம் உட்பட ஒட்டுமொத்த மாணவர்களின் பட்டியலின் அடிப்படையில் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் விகிச்சாரத்திலும் தமிழகமே முதலிடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் பெண்கள் 45.6 சதவிகிதமாகவும், ஆண்கள் 48.2 சதவிகிதமாகவும் உள்ளனர்.உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பட்டியலில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்கள் பின் தங்கியுள்ளன. நாட்டின் சராசரி அளவு 35.7 சதவிகிதமாக உள்ள நிலையில், பீகார் 14.4 சதவிகிதமும், அசாம் 17.2 சதவிகிதமும், ஒடிசா 18.5 சதவிகிதமும், மேற்குவங்கம் 21 சதவிகிதமும் பெற்று கடைசி இடங்களில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் இது 24.9 சதவிகிதமாக உள்ளது.

யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை 56.1 சதவிகிதத்துடன் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் உயர் கல்வியில் சேருபவர்களின் பட்டியலை பொறுத்தவரை 2012 -13 கல்வியாண்டில் 30.2 சதவீதமாக இருந்த எண்ணிக்கை, 2016- 17ல் 35.7 சதவீதமாக அதிகரித்துள்ளது”.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Leave A Reply

%d bloggers like this: