புதுதில்லி;
நாட்டின் பொருளாதார ‌வளர்ச்சியானது, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்திக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.2015-16இல் 8 ச‌தவிகிதமாகவும், 2014-15ல் 7.5 சதவிகிதமாகவும் இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 2016-‌17ம் ஆம் நிதியாண்டில் 7.1 சதவிகிதமாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில்- ‌நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில்- 6.5 சதவிகிதமாக சரிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ஆம்‌ ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நடப்பு நிதியாண்டில் தான் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி காண உள்ளது.இதேபோல நடப்பு நிதியாண்டில் தனிநபர் வருமான வளர்ச்சியும் குறையும் என்று புள்ளியல் துறை கணித்துள்ளது.தனிநபர் வருமானம் வளர்ச்சி விகிதம் 2016-17 நிதியாண்டில் 5.7 சதவிகிதமாக இருந்தது. இது 2017-18-ம் ஆண்டில் 5.3 சதவிகிதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ஆக இருந்த நிலையில், அது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 9.7 சதவிகிதம் வளர்ச்சியாக பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 782 என கணிக்கப்படுவதால், 9.7 சதவிகிதம் என்ற கடந்தாண்டு வளர்ச்சி விகிதத்திலிருந்து குறைந்து 8.3 சதவிகிதமாக இருக்கும் என்று புள்ளியல் துறை கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதற்கு மோடி ஆட்சியில் விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளின் மோசமான செயல்பாடுகளும், மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவையே முக்கியக் காரணங்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் விவசாய துறையில் கடந்த 4 ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் காணப்படவில்லை, இந்திய முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசு உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் முதல், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கான மானியமும் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் சுய உற்பத்தி திறனை வளர்த்தெடுக்க மத்திய அரசு எந்த செயல்களிலும் முயற்சிக்கவில்லை. மத்திய அரசு ஏற்றுமதியை குறைத்து இறக்குமதியை உயர்த்தியுள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவங்களுக்கு இங்கு திறந்த பொருளாதாரத்தை இந்தியா அரசு மேற்கொள்வதால் இந்தியாவின் உற்பத்தி துறையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.