தஞ்சை,
தஞ்சையில் அரசுப் பேருந்தை தாங்களே சேதப்படுத்தி விட்டு அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதாக நாடகமாடி அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சையிலிருந்து திருப்பதி புறப்பட்ட அரசு பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டிடச் சென்றார். கோடியம்மன் கோயில் அருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பேருந்தின் முகப்பு விளக்கை சேதப்படுத்தி விட்டுச் சென்றதாக காவல் நிலையத்தில் ஓட்டுநர் வீரமணியும் நடத்துநர் செல்வகுமாரும் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர் . அதில் பேருந்தின் நடத்துநர் செல்வக்குமார் பேருந்தில் வந்த வினித் என்ற நபரின் உதவியுடன் முகப்பு விளக்கை கல்லால் அடித்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து ஓட்டுநர் வீரமணி மற்றும் நடத்துநர் செல்வக்குமாரை கைது செய்த காவல் துறையினர் வினித்தை தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: