மும்பை,

புதிய ரூ.10 நோட்டை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரூ.10 நோட்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது ரூ.10 நோட்டில் மாற்றங்கள் மேற்கொண்டு புதிய ரூ.10 நோட்டை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. 63 மிமீ x 123 மிமீ என்ற அளவில் உள்ள இந்த புதிய நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் உள்ள இந்த நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தியின் உருவப்படமும் பின்புறத்தில் கோனார்க் சூரிய கோயிலின் படமும் அச்சிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும் பல்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. ரூ.10 என்பது தேவநகரி மொழியில் எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்புறத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் இலச்சினையும்   உள்ளது. இந்த புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தாலும் பழைய ரூ.10 நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: