ஈரோடு, ஜன.5-
ஈரோடு பர்கூர் மலைப்பகுதில் உள்ள பழங்குடியின மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை இந்திய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த டிசம்பர் 27 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட இம்மாநாட்டில் நாடு முழுவதுமுள்ள 30 மாநிலங்களைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகளின் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. இதில், தமிழகத்திலிருந்து முப்பது ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றில், இரண்டு ஆய்வு கட்டுரைகள் இந்திய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப்பள்ளி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரையும் ஒன்றாகும். இதைத்தொடர்ந்து கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவனும், ஆய்வுக் குழுவின் தலைவருமான எம்.சின்னக்கண்ணன் இளம் விஞ்ஞானி விருதும், பரிசும் வழங்கப்பட்டது. மேலும், இந்த ஆய்வு கட்டுரையானது எதிர்வரும் மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில் சமர்பிக்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்று இளம் விஞ்ஞானிகளை கௌரவிக்க உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: