மும்பை,

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகையை குறைக்க எஸ்.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5,000 இருக்க வேண்டும் என அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து நகர்ப்புற கிளைகளுக்கு ரூ. 3,000 , சிறு நகரங்களில் உள்ள கிளைகளுக்கு ரூ.2,000 மற்றும் கிராம கிளைகளுக்கு ரூ.1,000 எனக் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்ணயித்தது.

கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.1,581.55 கோடி. இந்நிலையில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் மட்டும் அபராதமாக ரூ.1,771 கோடி பெறப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. இது வங்கியின் நிகர லாபத்தை விட அதிகம்.

இதன் காரணமாக குறைந்தபட்ச இருப்புத்தொகையை 70 சதவிகிதம் குறைத்து 1000 ரூபாயாக அறிவிக்கவும், குறைந்தபட்ச இருப்புத்தொகையை மாதச்சராசரிக்குக் கணக்கிடாமல் காலாண்டுச் சராசரிக்குக் கணக்கிடவும் பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: