குன்னூர், ஜன.5-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட 10 ஆவது மாநாடு வெள்ளியன்று குன்னூரில் துவங்கியது.

இம்மாநாட்டையொட்டி கீழ்குந்தா பீமன் கொடி பயணம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ஆல்தொரை தலைமையிலும், கே.ராஜன் நினைவு ஜோதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சுப்பிரமணி தலைமையிலும் எடுத்து வரப்பட்டது. இதேபோல், ஏ.முகமது சித்திக் நினைவு கொடிமரம் வி.மைக்கேல் தலைமையில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாநாட்டின் கொடியை உதகை கமிட்டி செயலாளர் சங்கரலிங்கம் பெற்று கொண்டார். நினைவு ஜோதியை மாவட்ட குழு உறுப்பினர் டி.பி.ராஜேஸ்வரி பெற்றுக் கொண்டார். கொடி மரத்தை கோத்தகிரி கமிட்டி செயலாளர் எம்.ரஞ்சித்குமார் பெற்று கொண்டார்.முன்னதாக, குன்னூர் வி.பி.திடலில் அமைக்கப்பட்டிருந்திருந்த பொது மாநாட்டு மேடையில் கொடி, கொடிமரம், ஜோதியை மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் ஆர்.இளங்கோவன் வரவேற்றார்.

மேலும், கரிசல் கிருஷ்ணசாமி, உடுமலை துரையரசன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் பத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இம்மாநாடு சனி மற்றும் ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: