மும்பை;
ஐ.பி.எல் 11–வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27, 28–ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது.ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ மூலம் தேர்வு செய்யும் சலுகையை நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வியாழனன்று(ஜனவரி -4) சமர்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.8 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பெங்களூரு அணி 17 கோடிக்கு ஒப்பந்தம் செய்து தக்க வைத்தது. ஐபில் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யும் முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார் விராட் கோலி.அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் ; 

விராட் கோலி (17 கோடி) பெங்களூரு அணி.
தோனி (ரூ.15 கோடி), சுரேஷ் ரெய்னா (ரூ.11 கோடி),ஜடேஜா(7 கோடி) சென்னை அணி.
ரோகித் சர்மா(ரூ.15 கோடி),ஹர்திக் பாண்டியா (ரூ.11 கோடி),பும்ரா (ரூ.7 கோடி) மும்பை அணி.
டி-வில்லியர்ஸ் (11 கோடி) பெங்களூரு அணி.
டேவிட் வார்னர் (12 கோடி) ஐதராபாத் அணி.

Leave a Reply

You must be logged in to post a comment.