எலச்சிப்பாளையம், ஜன.5-
இந்து அறநிலைத்துறையை கண்டித்து எலச்சிப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் அகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நிழவும் இட நெருக்கடியினை சரி செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் நடைபெறும் மது விற்பனையை நிறுத்திட வேண்டும். மோசமான கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து வெள்ளியன்று எலச்சிப்பாளையம் பேருந்து நிலையத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொது மக்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நற்பணி மன்றங்கள் மற்றும் சமுக நல ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் முன்னாள் கவுன்சிலர் பி.மாரிமுத்து தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் பி.சுரேஷ்துவக்கவுரை ஆற்றினார். காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ரங்கநாதன், வெங்கடாசலம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிபிஎம் கிளை செயலாளர்கள் எஸ்.செல்வம், பி.ஜெயந்தி, க.சுரேஷ் மற்றும் கே.எஸ்.வெங்கடசாலம், ஆர்.ரமேஸ், உள்ளிட்ட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: