திருப்பூர், ஜன.4-
திருப்பூரில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் சமூக பாதுகாப்பு ஆணையர் லால்வேனா ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிச.15 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து கள அலுவலர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் 10 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக சிறப்பு பார்வையாளர் லால்வேனா புதனன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு செய்தார். பதிவேடுகள், புதிய வாக்காளர் சேர்க்கை குறித்த விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், பெயர் மாற்றம் குறித்த விண்ணப்பங்களை அவர் பார்வையிட்டதுடன், விண்ணப்பங்கள் ஆய்வின்போது தனிக்கவனம் எடுத்து முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வதுடன், மேற்காணும் பணிகள் நடைபெற்று வருவதை அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.

புதிய வாக்காளர்களை பொறுத்தவரை ஒருவர் கூட விடுபடாத அளவுக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்வரன்குமர், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: