இராமேஸ்வரம்;
எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இராமேஸ்வர மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் 523 விசைப்படகுகளில், புதனன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாகக் கூறி வினோ (48), நேதல் (47), வில்பர்ட் (36), ஜான்போஸ் (35), மூக்கன் (34), ஜஸ்டின் (20), மலைச்சாமி (50), ராஜாராம் (45), இன்னாசி (28), ஜேசு (50), மணி (42), மூக்கையா (40), மில்டன் (40) ஆகிய 13 மீனவர்களை 2 படகுகளுடன் சிறைப்பிடித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, ஏற்கெனவே 84 மீனவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: