திருப்பூர், ஜன.4-
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களின் சார்பில் புதன்கிழமையன்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பவித்ரா தேவி தலைமை வகித்தார். தமுஎச மாவட்ட துணை தலைவர் செ. நடேசன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் பி.பாலன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ச. நந்தகோபால், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.விமல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளார் ஆர்.குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும், சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், தமுஎச மாவட்ட செயலாளர் ஆர்.குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.