கோவை, ஜன. 4-
இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை துடியலூர் அருகேயுள்ள சுப்ரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (36). இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளரான இவர் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் சாயிபாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்த முபாரக் (38) என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். பின்னர், முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு புதனன்று முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முபாரக்கை இரண்டு நாள் காவலில்வைத்து விசாரிக்க உத்திரவிட்டார்.மேலும், வெள்ளியன்று மாலை 5 மணிக்கு மீண்டும் முபாரக்கை நீமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.