திருப்பூர், ஜன.4-
குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி சம்பளம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சிகளில் பணிபுரியும் காண்ட்ராக்ட், தினக்கூலி,என்.எம்.ஆர், சுய உதவிக்குழு உள்ளிட்ட துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை அடிப்படையில் சம்பளம் வழங்ககோரி திருப்பூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று மாநகராட்சி அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பழனிசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் ப.கு சத்தியமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: