பெங்களூர்,
ஆர் எஸ்எஸ் மற்றும் அதன் சங்பரிவார் கும்பலின் மதவெறி நடவடிக்கைகளை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்து வருகிறார். குறிப்பாக பிரபல முற்போக்கு எழுத்தாளர் கவுளி லங்கேஷ் படுகொலைக்கு பின் இருக்கும் இந்து மதவெறி சக்திகளின் நடவடிக்கைளை கடுமையாக கண்டித்து வருகிறார்.
இதற்கிடையில் கன்னட நாளிதழ் ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர் ஒன்றை எழுதி வருகிறார். இந்த தொடரை அந்த நாளிதழ் திடீரென நிறுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில் சங்பரிவார் கும்பல் இருப்பதாக பரவலாக பேச்சப்படுகிறது. இந்நிலையில் இது சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற வர்ணனையுடன் இது தொடர்பாக பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், தொடர் நிறுத்தப்பட்டதற்கு பின்னணியில் உள்ள கைகளுக்கு சொந்தக்காரர்களே..! உங்களது ஒவ்வொரு செயல் மூலமாகவும், நீங்கள் அணிந்துள்ள முகமூடிக்கு பின்னால் உள்ள உங்கள் முகத்தை மக்கள் தெளிவாகப் பார்த்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். என் வாசகர்களோடு உரையாட நான் பயன்படுத்தி வந்த தளத்தை முடக்குவதன் மூலம், அவர்களோடு நான் கொண்டுள்ள உறவைப் பிரித்துவிட இயலும் என நினைக்கிறீர்களா? எனவும் அவர் வினவியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகம் சார்ந்த தனது கேள்விகளை #JustAsking என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். எனவே தனது டிரேட்மார்க் ஹேஷ்டேக் #JustAsking மூலம் அவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: