அருப்புக்கோட்டை;
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிறந்த மனிதநேயரான பேராசிரியர் ஜி.குழந்தை வேல் பாண்டியன் செவ்வா யன்று மாலை இயற்கை எய்தினார்.

1975 இல் மூட்டாவில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஏராளமான போராட்டங்களில் கலந்து
கொண்டவர். அதற்காக சிறை ச்சாலை சென்றவர். துளிகள் அமைப்பில் இணைந்து பணி
யாற்றியுள்ளார். 1990 இல் அறிவொளி இயக்கத்தில் சேர்ந்ததோடு, அதன் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக திறம்பட பணியாற்றியவர்.

இதையடுத்து மக்கள் ஆரோக்கிய இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். பெண்கள் மதிப்புமிக்கவர் களாக மாற வேண்டும். அவர்கள் பொருளாதாரரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் துளிகள் பெண்கள் மேம்பாட்டுச் சங்கத்தை தொடங்கி, முன் னின்று பணியாற்றியவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவராக பொருளாளராக பொறுப்பு வகித்த வர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்.

சிறந்த நிர்வாகியாக வும், நல்ல ஒருங்கிணைப்பாள ராகவும் திகழ்ந்த பேராசிரியர் குழந்தைவேல்பாண்டியன், செவ்வாயன்று மாலை, அறிவியல் இயக்க அலு வலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற நிலை யில், அவரது உயிர் பிரிந்தது.இதையடுத்து, அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் கூட்டம்
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு பி.எஸ். போஸ்
பாண்டியன் தலைமையேற் றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாநி லக்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்
செல்வன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், பேராசிரியர்கள் .கே.சசிதரன்,ராஜமாணிக்கம், சோ. மோகனா, தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாநில செயலாளர் அமலராஜன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், ஏ.குரு சாமி, சி.முருகேசன், அ.விஜயமுருகன், ஜெ.ஜே.சீனிவாசன், எஸ்.லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சந்திரமோகன், நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து ஆகியோர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: