மவுண்ட் மாங்காவுனி;
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று விதமான தொடர்களில் பங்கேற்று வருகிறது.டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை ஏற்கனவே இழந்துள்ள நிலையில் தற்போது டி-20 தொடரையும் இழந்து வெறுங்கையோடு தாய்நாடு திரும்புகிறது.டி-20 தொடரின் முதல் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி மவுண்ட் மாங்காவுனி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடக்க வீரர்களாக முன்ரோ மற்றும் குப்தில் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியை கண்டு மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

சிறப்பாக விளையாடிய குப்தில் 38 பந்தில் 68 ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் மற்ற விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.விக்கெட்டுகள் சரிந்தாலும் தனது மிரட்டலான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த முன்ரோ டி-20 அரங்கில் 3-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
முன்ரோ 53 பந்தில், 3 பவுண்டரி, 10 சிக்சர் என 104 ரன்கள் எடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. 244 ரன்கள் ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி,பேட்ஸ்மேன்களின் சொதப்பளான ஆட்டத்தால் 16.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்த சுற்றுப்பயணத்தில் 3 விதமான தொடரை எதிர்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெறுங்கையோடு சோகத்தில் தாய்நாடு திரும்புகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.