புதுதில்லி;
மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உயர்பதவிகளுக்கு உரிய அதிகாரிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பதவிக்கு, ராஜிந்தர் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்திய உளவுத்துறையான ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். இதேபோல வடகிழக்கு மாநிலமான அசாமில் இயங்கி வரும் ‘உல்பா’ இயக்கத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக ஏ.பி. மத்தூர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரும், ‘ரா’ அமைப்பில் சிறப்பு செயலாளராக பணியாற்றியவர் ஆவார்.

Leave a Reply

You must be logged in to post a comment.