ஐதராபாத்,
தெலுங்கானாவில் தென்னை மரம் விழுந்ததில் 14 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள உப்லூர் கிராமத்தில், மணி என்ற 14 வயது சிறுவன் தனது தாயுடன் கோவிலுக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரம் மணி மீது விழுந்தது. இதில் மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply