நெல்லை: நெல்லை அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு பாசஞ்சர் ரயில் செவ்வாயன்று காலை 9 மணிக்கு புறப்பட்டது. இதில் நெல்லை குலவணிகர்புரத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர் ரயில் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலை பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது விஜயராஜ் எதிர்பாராதவிதமாக தவறி கிழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடதிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் விஜராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணி ஒருவர் கூறியதாவது: பல்வேறு முக்கிய இடங்களுக்கு செல்லும் இந்த ரயிலில்  பள்ளி மாணவர்கள் பணிக்கு செல்வோர் என எப்போது கூட்டமாகவே இருந்து வருகின்றது. எனவே இதற்கு கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: