பொள்ளாச்சி, ஜன.2-
பொள்ளாச்சி கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

புத்தாண்டை புத்தகத்துடன் துவங்குவதற்காக பொள்ளாச்சியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் வாழ்க்கை குறிப்பு அடங்கிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி பெண்கள் நகரமன்ற அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 1250 புத்தகங்களும், சமத்தூர் மேல்நிலைப் பள்ளிக்கு 750 புத்தகங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மாநில மாணவர் பேரவைத் தலைவர் க.நர்மதா கண்ணுசாமி, மாணவர்களின் கல்வி உரிமைகளுக்கான பொள்ளாச்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் கே.மகாலிங்கம், பழ.அசோக், ச.பிரபு, முஸ்தபா, கபூர், பிரகாஷ் மற்றும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: