திருப்பூர், ஜன. 2 –
திருப்பூர் இணை சார்பதிவாளர் -1 அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பதாகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இணை சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் வைக்கப்பட்டுள்ள அந்த பதாகையில், பட்டா இல்லை என்றால் லஞ்சம், பத்திரப்பதிவை காலதாமதம் செய்து லஞ்சம், எதற்கெடுத்தாலும் லஞ்சம், இடைதரகர்களின் கொட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.