திருப்பூர், ஜன. 2 –
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் கரியகாளியம்மன் கோயில் மண்டபத்தில் ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை பகல் 11 மணிக்கு கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 1958 ஆம் ஆண்டில் இருந்து இன்றைய நாள் வரை கீழ்பவானி பாசனம் நீர் உரிமையைத் தொடர்ந்து இழந்து வந்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து ஆலோசிப்பதற்கு அவசரக் கூட்டம் நடத்தப்படுகிறது. நீர் நிர்வாகத் தவறைத் திருத்திக் கொள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை. நடப்பு ஆண்டிலும் நீர் நிர்வாகத் தவறு தொடர்கிறது. போராட்ட குணத்துடன், சட்டத்தின் ஆட்சி கோரி, ஒன்றிணைந்து போராடினால் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கரில் எள் சாகுபடிக்கு உண்டான உரிமை நீரைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.