நாமக்கல், ஜன.2-
இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக்குழுவின் சார்பில்மாணவர் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக்குழுவின் இணையதளமான நெகிழ்.காம் சார்பில் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் முதல் பயிற்சி விழா திங்களன்று நாமக்கல்லில் சங்கத்தின் மாவட்ட குழு அலுவலகத்தில் துவங்கியது. முன்னதாக, கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம் என முகாமிற்கு வந்திருந்த இளம் பத்திரிகையாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் தேன்மொழி வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன் இணையதளம் குறித்து அறிமுக உரையாற்றினார்.

இதையடுத்து தீக்கதிர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் வி.பரமேஸ்வரன், மாணவர்களுக்கு கட்டுரைகள் எழுதுவது, செய்திகள் சேகரிப்பது, சீர்படுத்துதல் மற்றும் புகைப்படங்கள் தொடர்பாக பயிற்சி அளித்தார். மேலும், மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இம்முகாமில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் டி.சரவணன், மாவட்ட துணை தலைவர் ஆர்.சக்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கதிர் நன்றி கூறினார். முன்னதாக, நாமக்கல் மாவட்டம் முழுவதுமுள்ள 247 கிராமங்களில், 60 நாட்கள் மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் பத்திரிக்கையாளராக வேண்டும் என விருப்பம் தெரி
வித்தவர்களை ஆய்வின் மூலம் தேர்வு செய்து பயிற்சி முகாமிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் திரளான மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: