பொள்ளாச்சி, ஜன.2-
பொள்ளாச்சி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் முன் அரசு நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 2010 மற்றும் 2011ம் ஆண்டு ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் விரிவு படுத்தப்பட்டது. அதில் சுற்று சுவரும் கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இது எப்போது வேண்டுமானால் இடிந்து விழலாம். இதில் பள்ளி குழந்தைகள் சிக்கி ஆபத்தான நிலைஏற்பட்டு விடக்கூடாது. எனவே மாவட்ட கல்வித்துறை உடனடியாக தலையிட்டு சுற்று சுவரை சீரமைப்பு செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: