சென்னை,
ஆங்கில புத்தாண்டு-2018 இன்று ஹேக்கர்கள் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளத்தை முடக்கப்பட்டது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சமீபத்தில்தான் பவள விழாவை கொண்டாடியது.

முரசொலி இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் ஹேக்கர்களை குறிக்கும் புகைப்படத்துடன், புத்தாண்டு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளனர். அத்துடன், பாதுகாப்பான இணையதளத்தை உருவாக்குமாறும், இணையதள பாதுகாப்பு  குறித்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதுதவிர, முகப்புப் பக்கத்தில் பல்வேறு பாடல்கள், ஆல்பம் அடங்கிய யூ டியூப் பக்கத்தையும் இணைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இணையதளத்தை சிரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது மீண்டும் இணையதளம் செயல் படத்துவங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து திமுகவின் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முரசொலி இணையதளம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.