திருவனந்தபுரம்;
ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த 25 மீன் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று  வழங்கினார்.திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒக்கி புயல் நிவாரணமாக 25 மீன் தொழிலாளர் குடும்பத்தினரிடம் இத்தொகையை முதல்வர் வழங்கினார். அதோடு பிரதமரின் நிவாரண நிதியான ரூ.2 லட்சத்தையும் முதல்வர் வழங்கினார். கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீன் தொழிலாளர்களுக்கான உதவிகள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என அப்போது முதல்வர் தெரிவித்தார்.

நிவாரணப்பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும். இதுபோன்ற துயரம் ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடலுக்கு செல்லும் மீன் தொழிலாளர் குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 102 நபர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் நிதி உதவியை வழங்கினார்.

Leave A Reply

%d bloggers like this: